ஆப்பிரிக்க நாடான காங்கோவில் உள்ள கோமா நகரம் அருகே, உலகின் மிக ஆபத்தான எரிமலைகளில் ஒன்றாக கருதப்படும் நியாராகாங்கோ என்று அழைக்கப்படும் எரிமலை நேற்றிரவு வெடிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கானோர் அவர்கள் இல்லத்தை விட்டு வெளியேறியுள்ளனர். உயிர் சேதம், பொருள் சேதம் குறித்த விவரம் தெரியவில்லை. இதற்கு முன்பாக இந்த எரிமலை 2002இல் இதேபோல் வெடித்தபோது 250 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Categories
உலகின் மிக ஆபத்தான எரிமலை வெடிப்பு… வைரலாகும் வீடியோ…!!!
