சென்னையில் 2 முறை பிடிபட்டால் வாகனம் திருப்பி தரப்படாது என சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் நாளை முதல் ஒரு வார காலத்திற்கு தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு என்ற அறிவிப்பை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்டிருந்தார். இந்த ஊரடங்கு காலகட்டத்தில் மருந்தகங்கள், பால்கள் தவிர மற்ற எந்த அத்தியாவசிய கடைகளும் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் மக்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியில் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மேலும் சென்னையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் காவலர்களிடம் 2 முறை பிடிபட்டால் வாகனம் திருப்பி தரப்படாது என சென்னை காவல்துறை அறிவித்துள்ளது. மேலும் சென்னையில் முழு ஊரடங்கை கண்காணிக்கும் பணியில் 20,000 போலீசார் ஈடுபடுவர். 320 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனத் தணிக்கை தீவிரப்படுத்தப்படும். ஊரடங்கை மீறி வெளியே வருபவரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.