அமெரிக்காவில் வசிக்கும் 63 வயது நபர், 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள லின்கால்ன் என்ற பகுதியில் வசிக்கும் ஆண்ட்ரூ கே கசட் என்ற 63 வயது நபர், கடந்த 2017 ஆம் வருடத்திலிருந்து தற்போது வரை 4 சிறுமிகளிடம் பாலியல் தாக்குதல் நடத்தியுள்ளார். அச்சிறுமிகள் 10 முதல் 15 வயதுடையவர்கள். அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் ஆண்ட்ரூவிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அதன் பின்பு அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். மேலும் காவல்துறையினர் ஆண்ட்ரூ மீது சிறுமிகள் மீது பாலியல் தாக்குதல் நடத்துதல் மற்றும் வன்கொடுமை போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.