தமிழகம் முழுவதும் மீன்பிடி தடை காலம் கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. இழுவைப் படகுகள் மூலம் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் லட்சக்கணக்கான மீனவர்கள் வேலை இழந்து தவித்து வருகிறார்கள். இந்நிலையில் தமிழகத்தில் மீன்பிடி தடைக்கால நிவாரணமாக மீனவர்களுக்கு தலா 5 ஆயிரம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மீன்பிடி தடைக்கால நிவாரணத்தால் 1.72 லட்சம் மீனவ குடும்பங்கள் பயன் பெறுவர் எனவும் தெரிவித்துள்ளார்.
Categories
BREAKING: தமிழகத்தில் ரூ.5000 வழங்க உத்தரவு…. முதல்வர் அதிரடி…!!!!
