Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

விதிமுறையை மீறிய செயல்… ரோந்து பணியில் சிக்கிய வாலிபர்கள்… காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.புதூர் அருகே ஊரடங்கு விதிமுறைகளை மீறி காரணமில்லாமல் சுற்றித்திரிந்த 2 மோட்டார் சைக்கிள்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மணியாரம்பட்டி பேருந்து நிலையம் பகுதியில் உலகம்பட்டி காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது வளநாடு வாடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திருப்பதி ( 23 ), மணியாரம்பட்டியைச் சேர்ந்த சிவா ( 23 ) ஆகிய இரண்டு பேரும் காரணமில்லாமல் மோட்டார் சைக்கிளில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி சுற்றி திரிந்துள்ளனர்.

இது குறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் அவர்கள் 2 பேர் மீதும் வழக்குப்பதிந்துள்ளனர். அதன்பின் அந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் அவர்களிடமிருந்து உலகம்பட்டி காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |