Categories
மாநில செய்திகள்

இன்று முதல் மீண்டும் விமான சேவை…. விமான நிலைய நிர்வாகம் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. குறிப்பாக போக்குவரத்து சேவை அனைத்தும் முற்றிலும் முடக்கப்பட்டது. அதன்படி கடந்த 10 நாட்களுக்கும் மேலாக விமான சேவையும் ரத்து செய்யப்பட்டிருந்தது. தமிழகம் முழுவதும் மேலும் 31-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீக்கப்பட்டுள்ள நிலையில் இன்று ஒரு நாள் பேருந்துகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 10 நாட்களாக ரத்து செய்யப்பட்டிருந்த சேலம் மற்றும் சென்னை விமான சேவை இன்று முதல் மீண்டும் இரு மார்க்கத்திலும் இயக்கப்படுவதாக விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி காலை 7.15 மணிக்கு சென்னையில் இருந்து ட்ரூஜெட் விமானம் புறப்பட்டு 8.15 மணிக்கு சேலம் வந்தடையும். மறுமார்க்கத்தில் காலை 8.35 மணிக்கு சேலத்திலிருந்து புறப்பட்டு 9.35 மணிக்கு விமானம் சென்னை வந்தடையும்.

Categories

Tech |