சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி பகுதியில் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறிய 29 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
முழு கொரோனா ஊரடங்கு காலத்திலும் மோட்டார்சைக்கிளில் தேவையில்லாமல் இளையான்குடி பகுதியில் சுற்றித்திரிந்த 29 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து இருசக்கர வாகனங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தற்போது கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துக் கொண்டே இருப்பதால் அரசு விதிக்கும் விதிமுறைகளை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும்.
தேவை இல்லாமல் வாகனங்களில் வெளியே சுற்றக்கூடாது அவ்வாறு சுற்றி திரிந்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும், பொதுமக்கள் பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.