நைஜீரியாவில் ராணுவ தளபதி உட்பட 10 பேர் விமான விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நைஜீரியா விமானப்படைக்கு சொந்தமான விமானம் அபுஜாவிலிருந்து கடுனாவுக்கு புறப்பட்ட போது கடுனா விமான நிலையத்திற்கு அருகே விபத்துக்குள்ளானதாக நைஜீரிய விமானப்படை தகவல் தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் விமான குழுவினர், நைஜீரிய ராணுவ தளபதி இப்ராஹிம் அட்டத்திரு உட்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகவும் நைஜீரிய ராணுவம் உறுதிபடுத்தியுள்ளது.
ஆனால் அந்த விமானம் விபத்திற்குள்ளானதற்கான காரணம் எதுவும் தெரியாததால் ராணுவம் தரப்பில் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.