Categories
சினிமா தமிழ் சினிமா

ஜிவி பிரகாஷுடன் இணைந்து பாடிய சூப்பர் சிங்கர் பிரபலம்… வைரலாகும் கலக்கல் வீடியோ…!!!

சூப்பர் சிங்கர் பிரபலம் ஸ்ரீ நிஷா இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷுடன் இணைந்து பாடிய பாடல் வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் செம ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் பலரும் பின்னணி பாடகர்களாக உயர்ந்துள்ளனர்.  அந்த வகையில் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் கலந்து பிரபலமடைந்தவர் ஸ்ரீ நிஷா .

மேலும் இவர் பல திரைப்படங்களில் பாடல்கள் பாடி அசத்தியுள்ளார். இந்நிலையில் ‘லாகின்’ என்ற படத்திற்காக இசையமைப்பாளர் ஜிவி பபிரகாஷ்,  ஸ்ரீநிஷா இருவரும் இணைந்து ‘நோ மட்டும் சொல்லாத’ என்ற பாடலை  பாடியுள்ளார்.  தற்போது இந்த பாடல் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

 

Categories

Tech |