மேற்கு வங்க மாநிலத்தில் பவானிபூர் தொகுதியில் வெற்றிபெற்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராஜினாமா செய்ததை தொடர்ந்து மம்தா பானர்ஜி அந்த தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேற்குவங்க தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் பெரும்பான்மையான தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. இருப்பினும் மம்தா பானர்ஜி நந்திகிராமம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார். ஆனாலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மேற்கு வங்காளத்தில் முதல்வராக மூன்றாவது முறை மம்தா பானர்ஜி பதவி ஏற்றுக்கொண்டார். மம்தா பானர்ஜி முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டாலும் அவர் ஆறு மாதத்திற்குள் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்து வந்துள்ளார்.
அதேநேரம் தற்போது பவானிபூர் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சொபந்தேப் சட்டோபாத்யாய் தனது பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது இது தனது முடிவும், கட்சியின் முடிவு ஆகும் எனக் கூறினார். மேலும் இந்த பதவியை நான் மகிழ்ச்சியுடன் இராஜினாமா செய்வதாகவும் தெரிவித்தார். இதன் காரணமாக பவானிபூர் தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தொகுதியில் மம்தா பானர்ஜி போட்டியிடுவார் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.