Categories
உலக செய்திகள்

கால்வாயில் கிடந்த பிஞ்சு குழந்தையின் உடல்.. மனமுடைந்து போன இளம் தந்தை..!!

பிரிட்டனில் கால்வாயிலிருந்து பிறந்து சில நாட்களே ஆன பிஞ்சு குழந்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பிரிட்டனில் வசிக்கும் லீ கோல்ஸ் என்ற 27 வயதான நபர், கடந்த வியாழக்கிழமையன்று சூப்பர் மார்க்கெட்டிலிருந்து வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தபோது, வழியில் வால்சால் என்ற பகுதியில் இருக்கும் கால்வாயில் பச்சிளம் குழந்தையின் உடல் கிடப்பதை பார்த்து அதிர்ந்துள்ளார். எனவே அவர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

தற்போது காவல்துறையினர் அந்த குழந்தை தொடர்பில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் இந்த குழந்தையினுடைய தாய் மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என்று கேட்டுள்ளனர். இதற்கிடையில் காவல்துறையினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில் இந்த பிஞ்சு குழந்தை சுமார் நான்கு நாட்களுக்கு கால்வாய் நீரில் கிடந்திருக்க வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளனர். இதுகுறித்து ஒரு குழந்தைக்கு தந்தையான லீ கோல்ஸ் கூறுகையில், “பிஞ்சு குழந்தையின் கால் மற்றும் கைகளை முதலில் பார்த்தவுடன் மொத்தமாக உடைந்து போனேன். அதிலிருந்து மீண்டு வர முடியவில்லை.

அந்த இடத்தை விட்டு நகர முடியவில்லை. கட்டுப்பாடின்றி அங்கேயே விழுந்து விடுவோமோ என்று பயந்தேன்” என்று கண் கலங்கியபடி தெரிவித்துள்ளார். அதன் பின்பு அங்கிருந்து குடியிருப்புக்கு சென்றவுடன் தன் மகனை அணைத்துக் கொண்டு என்னை அமைதிப்படுத்திக்கொண்டேன் என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |