எம்.ஜி.ஆருடன், நடிகர் சத்யராஜ் எடுத்து கொண்ட அரிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் நடித்து ரசிகர்கள் மத்தியில் என்றும் நிலைத்திருப்பவர் நடிகர் எம்.ஜி.ஆர். இவர் மக்களுக்காக பல தொண்டுகளை ஆற்றியுள்ளார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இவர் இருந்த போது இவரை நேரில் கண்டு அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள மாட்டோமா என்று பலர் ஆசைப்பட்டு உள்ளனர்.
சிலர் அதை நிறைவேற்றியுள்ளனர். அந்த வகையில் தமிழ் சினிமாவின் மற்றொரு பிரபல நடிகரான சத்யராஜ் எம்ஜிஆரை நேரில் சந்தித்து அவருடன் கைகோர்த்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். இந்த அரிய புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.