என்னை ‘பவர்-ப்ளே’ பவுடராக உருவாக்கியது தோனி தான் ,என்று இளம் வீரர் தீபக் சாஹர் கூறியுள்ளார்.
இந்திய அணியின் டி20 போட்டியில் முன்னணி பந்துவீச்சாளரும், ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் இடம் பெற்றவருமான 28 வயதான தீபக் சாஹர் பேட்டி ஒன்றில் கூறும்போது, கிரிக்கெட் போட்டியில் தோனியின் தலைமையில் கீழ் விளையாட வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் கனவு. அந்தக் கனவு தற்போது ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் மூலம் நனவாகி விட்டது என்று கூறினார். சிஎஸ்கே அணியில் கேப்டன் தோனியின் தலைமையில், நான் நிறைய விஷயம் கற்றுக் கொண்டுள்ளேன். அவரின் வழிகாட்டுதலின்படி என்னுடைய ஆட்டத்தை வேற லெவலுக்கு எடுத்து சென்று உள்ளேன். அத்துடன் சிஎஸ்கே அணிக்காக ‘பவர்- பிளே’ மூன்று ஓவர்களில் வேறு யாரும் பந்து வீசியது இல்லை. ஆனால் நான் மட்டுமே ‘பவர்- பிளே’ க்குள் பந்துவீசி உள்ளேன். அதற்கு முக்கியமான காரணம் அணியின் கேப்டன் டோனி தான்.
அத்துடன் போட்டியின்போது முதல் ஓவரில் ,பவுலிங் செய்வது எளிதான விஷயம் அல்ல. அதோடு அதிக ரன்களை விட்டுக் கொடுக்காமல் கட்டுப்படுத்துவது எப்படி என்பதையும் அதன்மூலம் பெற்றுக்கொண்டு முன்னேற்றம் கண்டுள்ளேன் என்று கூறினார். இதனால் என்னைப் ‘பவர்-ப்ளே’ பலராக உருவாகியது தோனி தான் .நீங்கள் என்னுடைய ‘பவர்-ப்ளே’ பவுலர் என்று எப்போதும் தோனி சொல்வார் என்று தீபக் சாஹர் கூறியுள்ளார் . அத்துடன் இலங்கைக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள தீபக் சாஹர் ,இந்த இலங்கை தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவான் இருந்தால் நன்றாக இருக்கும்.ஏனெனில் அவர் இந்திய அணியில் நீண்ட காலமாக விளையாடி வருவதால் அவருக்கு நிறைய அனுபவம் இருக்கும் ,அதோடு சீனியர் பிளேயர் கேப்டனாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார் .