தயாரிப்பாளர் போனி கபூருக்கு புயலால் 2 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் நடித்து வரும் ‘வலிமை’ படத்தை இயக்கி வருபவர் போனி கபூர். இவர் ஹிந்தியில் இந்திய முன்னாள் கால்பந்து வீரர் மற்றும் பயிற்சியாளரான சையத் அப்துல் ரஹீம் இன் வாழ்க்கை கதையை படமாக தயாரித்து வருகிறார். ‘மைதானம்’ என பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தில் சையத் அப்துல் ரஹீம் கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் அஜய் தேவ்கன் நடித்து வருகிறார்.
தற்போது ஹிந்தியில் தயாராகிவரும் இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் மும்பையில் ஏற்பட்ட ‘டவ்தே’ புயலால் இப்படத்திற்காக அமைக்கப்பட்ட பிரம்மாண்ட செட் மிகவும் சேதம் அடைந்ததுள்ளது. இதனால் தயாரிப்பாளர் போனி கபூருக்கு 2 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.