நடிகை ஜோதிகா சலார் படத்தில் நடிகர் பிரபாஸுக்கு சகோதரியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் நடிகை ஜோதிகா முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர். இவர் அஜித், விஜய், சூர்யா, விக்ரம் போன்ற பல டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து அசத்தியுள்ளார். இதன்பின் நடிகர் சூர்யாவை திருமணம் செய்துகொண்ட ஜோதிகா சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்தார். இதையடுத்து இவர் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான ’36 வயதினிலே’ படத்தின் மூலம் சினிமாவில் ரீ என்ட்ரீ கொடுத்தார் .
கடைசியாக இவர் நடிப்பில் பொன்மகள் வந்தாள் திரைப்படம் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது . இந்நிலையில் நடிகை ஜோதிகா சலார் படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேஜிஎஃப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் நடிகர் பிரபாஸுக்கு சகோதரியாக ஜோதிகா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.