Categories
சினிமா தமிழ் சினிமா

சமந்தாவின் வெப் தொடரால் எழுந்த சர்ச்சை…. தடை விதிக்க வேண்டுகோள்…!!!

சமந்தாவின் வெப் தொடரை தடை செய்ய வேண்டுமென்று கூறிவருகின்றனர்.

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா நடிப்பில் ‘தி ஃபேமிலி மேன் 2’ என்ற வெப் தொடர் உருவாகியுள்ளது. இந்த வெப் தொடர் வரும் ஜூன் 4-ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது. இந்நிலையில், சமீபத்தில் வெளியான இத்தொடரின் டிரெய்லர் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஏனென்றால் இந்த ட்ரெய்லரில் ஈழத் தமிழர்களையும் அவர்களது போராட்டத்தையும் இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாக சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆகையால் இத் தொடரை தடை செய்ய வேண்டும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |