சிறுசேமிப்பு மீதான வட்டியை மத்திய அரசு குறைத்துள்ளது என்பது மிகவும் தவறானது என்று சிதம்பரம் கருத்துத் தெரிவித்துள்ளார்.
அரசு சம்பந்தப்பட்ட சிறுசேமிப்பு திட்டத்தில் கொடுக்கப்படும் வட்டி விகிதத்தை மத்திய அரசு குறைத்துள்ளது. இதையடுத்து மத்திய அரசின் செயல்பாடு மிகவும் தவறானது என பா சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது:” சிறு சேமிப்பு திட்டங்கள், தொழிலாளர் வைப்பு நிதி உள்ளிட்டவற்றின் வட்டியை மத்திய அரசு குறைத்தது பொருளாதர அடிப்படையில் சரியாக இருந்தாலும், இது செயல்படுத்தப்பட்ட நேரம் முற்றிலும் தவறானது என்று கூறியுள்ளார். இக்கட்டான நிலையில் மக்கள் சேமிப்புக்கான வட்டி நம்பி உள்ளனர். வட்டியை குறைத்து மத்திய அரசு இத்தகைய முடிவை எடுத்துள்ளது மிகவும் தவறானது. எனவே இதனை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும், பழைய வட்டியை மீண்டும் தர வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ள வட்டி குறைப்பு நிதி அமைச்சக கவனக்குறைவால் ஏற்பட்ட தவறு. விளைவுகளை அறிந்து நிதி அமைச்சகம் வட்டி குறைப்பு குறித்த கோப்புகளில் அமைச்சர் கையெழுத்திட்டார் என்று விமர்சனம் செய்துள்ளார்.