Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரிக்கு 50 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள்…. துணைநிலை ஆளுநர் நன்றி….!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் பாதிப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் நாளுக்கு நாள் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அது மட்டுமல்லாமல் சில மாநிலங்களில் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. அதனால் கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்திற்கு 50 ஆக்சிஜன் செறியூட்டிகளை உலக சுகாதார நிறுவனம் வழங்கியுள்ளது.அதற்கு மனமார நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். மேலும் கொரோணா பரவலை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு மருத்துவ உதவிகளையும், உபகரணங்களையும், மருத்துவ ஆலோசனைகளையும் உலக சுகாதார நிறுவனம் வழங்கி வருகிறது என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |