பிரிட்டன் இளவரசர் ஹரி, தன் தாய் கொலை செய்யப்பட்ட போது, தான் அடைந்த வேதனையை வெளிப்படுத்துவதற்கு கூட அரச குடும்பத்தினர் அனுமதிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் இளவரசர் ஹரி “The Me You can’t see” என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை புதிதாக நடத்துகிறார். அந்த நிகழ்ச்சியில் அவர் அளித்த நேர்காணலில், எனக்காக என் குடும்பத்தினர் உதவுவார்கள் என்று கருதினேன். என் கோரிக்கை ஒவ்வொரு முறையும் அலட்சியப்படுத்தப்பட்டது என்று தெரிவித்திருக்கிறார்.
ஆனால் அனைத்தையும் எப்படியாவது சரி செய்யலாம் என்று வருடக்கணக்காக முயற்சி மேற்கொண்டோம். எனினும் பலன் கிடைக்கவில்லை. மேகன் போராட்டத்தை எதிர்கொண்டிருந்தார். அவரின் கஷ்டங்களை பார்த்தபோது என் தாய் டயானாவின் கடைசி நாட்கள் தான் ஞாபகம் வந்ததாக ஹரி கூறியுள்ளார்.
மேலும் என் தாய் வெள்ளையர் இல்லாத ஒரு நபருடன் தொடர்பு வைத்திருந்த காரணத்தால் விரட்டியடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். அதே போல் தான் தற்போதும் நடக்கிறது. எனது வாழ்க்கையில் மற்றொரு பெண்ணை நான் இழப்பதற்கு விரும்பவில்லை என்று கூறியிருக்கிறார்.
அந்த நேர்காணலில், தன் தாயின் மரணத்திற்குப் பிறகு தான் அடைந்த வேதனையை பற்றி வெளியில் பேச முடியாத நிலையில் தொடங்கி, மேகன் தற்கொலை செய்யும் நிலைக்கு சென்றபோது குடும்பத்தினர் அவருக்கு உதவி செய்யவில்லை என்பது வரை ஹரி தன் மனதில் தோன்றிய அனைத்தையும் பேசிவிட்டார்.