ஐபிஎல் போட்டிகளை ஒத்திவைத்தது சரியான முடிவு என கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நடைபெற்று வந்த ஐபிஎல் போட்டி கொரோனா தொற்று காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதுமட்டுமில்லாமல் போட்டியில் விளையாடிக்கொண்டிருந்த வீரர்களுக்கும் கொரோனா உறுதியானதை அடுத்து போட்டிகள் நிறுத்தப்பட்டன போட்டிகள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளை ஒத்திவைத்தது சரியான முடிவு என கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது:” நாங்கள் விளையாடிய போது கொரோனா கட்டுப்பாட்டில் இருந்தோம். அந்த கட்டுப்பாட்டில் நாங்கள் நன்றாக கவனிக்கப்பட்டோம். ஆனால் சில மீறல்களும் இருந்தன. இதனால் போட்டியை தொடர முடியவில்லை. மேலும் எங்களை பாதுகாப்பாக வீட்டுக்கு அழைத்துச் செல்ல(அ) நாங்கள் எங்கு செல்லவேண்டும் என்று நிறைய பேர் அதற்கான பணியில் ஈடுபட்டனர் என்று தெரிவித்துள்ளார்.