தமிழகத்தில் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு உரிய ஆணையை பிறப்பிக்க விசிக எம்எல்ஏ பாலாஜி தமிழக முதல்வரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார். கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதுமட்டுமல்லாமல் அவர் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதை நேற்றைக்கு துவங்கி வைத்தார்.
முதல்வர் தடுப்பூசி போடுவதை தொடங்கி வைத்ததை அடுத்து பல மாவட்டங்களில் இதை செயல்படுத்த உரிய ஆணை வரவில்லை என்று கூறி 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்படுவது மறுக்கப்பட்டு வருகின்றது. எனவே உரிய ஆணையை தமிழக முதல்வர் பிறப்பிக்க வேண்டும் என்று விசிக எம்எல்ஏ பாலாஜி வலியுறுத்தியுள்ளார்.