புதுக்கோட்டை மாவட்டத்தில் டீக்கடை உரிமையாளர் கொரோனா நிவாரண நிதியாக கடை உண்டியலில் வசூல் செய்த 20 ஆயிரம் ரூபாயை காசோலையாக கலெக்டரிடம் வழங்கியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருவரங்குளம் பகுதியிலிருக்கும் வம்பன் நால்ரோடு கடைவீதியில் பகவான் என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். இவர் காஜா புயலின் போது பாதிக்கபட்ட மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்து கூலி தொழிலாளர்கள் கடையில் டீ குடித்து வைத்திருந்த கடன் பாக்கியை தள்ளுபடி செய்துள்ளார்.
இந்நிலையில் கொரோனா 2 வது அலை அதிகரித்து வரும் சூழ்நிலையில் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடமிருந்து மொய் விருந்து என்ற பெயரில் கடையில் குடிக்கின்ற டீ மற்றும் பலகாரம் சாப்பிட்ட பணத்தை தனது கடையில் வைக்கப்பட்டுள்ள உண்டியலில் செலுத்தி உதவிடுமாறு நூதன முறையில் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனையடுத்து தான் வசூலித்த 20 ஆயிரம் ரூபாயை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக மாவட்ட கலெக்டர் உமா மகேஷ்வரியிடம் பகவான் காசோலையாக வழங்கியுள்ளார். இந்த செயலை பொது மக்கள் அனைவரும் பாராட்டியுள்ளனர்.