புதுக்கோட்டை மாவட்டத்தில் கிணற்றில் தவறி விழுந்த மயிலை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மருங்கூர் ராணி கிராமத்தில் காவிய ராஜ் எனபவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான கிணறு ஒன்று அப்பகுதியிலுள்ளது. அந்த கிணற்றில் மயில் ஒன்று தவறி விழுந்ததுள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதுக்குறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கயிற்றின் உதவியுடன் கிணற்றில் இறங்கி மயிலை உயிருடன் மீட்டு மேலே கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து அந்த மயிலை வனப்பகுதியில் கொண்டு விட்டுள்ளனர்.