உலக நாடுகள் முழுவதிலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. அதனால் உலக சுகாதார நிறுவனம் கொரோனாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை மற்றும் நோயாளிகளுக்கு அளிக்கக் கூடிய மருந்துகள் ஆகியவை அடங்கிய தகுதிப் பட்டியல் ஒன்றை தயார் செய்துள்ளது. அதில் கொரோனா சிகிச்சை முறை மற்றும் மருந்துகள் பரிந்துரை செய்துள்ளது. இந்நிலையில் அந்த தகுதிப் பட்டியலில் இருந்து ரெம்டெசிவிர் மருந்தை உலக சுகாதார நிறுவனம் தற்போது நீக்கியுள்ளது. இந்த மருந்தானது ஜிலேட் சயின்ஸ் என்ற மருந்து நிறுவனத்தால் தயாரிக்கப்படும் வைரஸ் எதிர்ப்பு மருந்து.
இதற்கு முன்னதாக உலக சுகாதார நிறுவனம் இந்த மருந்து நோய் தொற்றுக்கு எதிராக சிறப்பாக செயல்படும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதால் இதனை பரிந்துரைக்க வேண்டாம் என தெரிவித்திருந்தது. தற்போது கொரோனா சிகிச்சை மருந்துக்கான தகுதிப் பட்டியலில் இருந்து இந்த மருந்து நீக்கப்பட்டுள்ளது. ரெம்டெசிவிர் மருது நீக்கப்பட்டாலும் சம்பந்தப்பட்ட நாடுகள் இது குறித்து முடிவு செய்து கொள்ளலாம். மேலும் இந்தியாவில் கொரோனா சிகிச்சைக்காக ஐவர்மெக்டின் மருந்தை பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், அந்த மருந்தை பயன்படுத்த வேண்டாம் என்றும் பரிந்துரைத்துள்ளது.