ராணிப்பேட்டையில் 16 வயதாகின்ற சிறுமியை கர்ப்பிணியாக்கிய முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விசாரத்தில் 75 வயதாகின்ற அன்வர் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் வேப்பூரில் வசித்து வரும் 16 வயதாகும் சிறுமியை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததோடு மட்டுமல்லாமல் பலாத்காரமும் செய்துள்ளார். இதனால் அச்சிறுமி கர்ப்பிணியாகி கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
இதனையடுத்து அச்சிறுமியினுடைய தாயார் முதியவரின் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அப்புகாரை ஏற்ற காவல்துறையினர் அன்வரை போக்சோ சட்டத்திற்கு கீழ் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.