தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த சூழலில் நடப்பு மாதத்திற்கான மின் கட்டணத்தை பொதுமக்களே கணக்கீடு செய்து கொள்ளும் முறையை மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இதுபற்றி மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நடப்பு மே மாதத்திற்கான மின் கட்டணத்தை பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருக்கும் மீட்டர் பாக்ஸ் மூலமாக சுயமாக கணக்கீடு செய்யலாம்.
அதனை போட்டோ எடுத்து தங்கள் சுய மதிப்பீட்டை வாட்ஸ்அப் வழியாக மின்வாரிய அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும். இந்த மாதத்திற்கான மின் கட்டணம் ஏற்கனவே கணக்கிடப்பட்டு இருந்தால் மின்சார வாரிய உதவி பொறியாளரும், உதவி கருவூல அலுவலரும் அதை நீக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஏதாவது மக்களுக்கு சந்தேகம் இருந்தால் மீண்டும் மின் வாரிய பணியாளர்கள் ரீடிங் எடுப்பார்கள் என்று தெரிவித்துள்ளது.