Categories
தேசிய செய்திகள்

அந்த மனசு இருக்கே அதுதான் கடவுள்… 190 தெரு நாய்களுக்கு…. தினமும் சிக்கன் பிரியாணி… சமைத்துப் போடும் உன்னத மனிதர்..!!

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ஒருவர் தினமும் 190 நாய்களுக்கு சிக்கன் பிரியாணியை சமைத்து உணவளித்து வருகிறார். இதைப்பற்றி இந்த தொகுப்பில் நாம் பார்த்து தெரிந்து கொள்வோம்.

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். பல மாநிலங்களில் ஊரடங்கு விதித்துள்ள காரணத்தினால் மக்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றன. இதனால் தெருக்களில் சுற்றித்திரியும் விலங்குகளுக்கு உணவளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவைகள் அனைத்தும் பட்டினியால் தவித்து வருகின்றனர். இது போன்ற சூழ்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ரஞ்ஜீத் நாத் என்பவர் தினமும் 190 நாய்களுக்கு சிக்கன் பிரியாணியை சமைத்து அளித்து வருகிறார்.

இதுகுறித்து அவர் கூறிய போது “வாரத்தில் புதன், ஞாயிறு மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நான் மிகவும் பிஸியாக இருப்பேன். காரணம் 30 முதல் 40 கிலோ பிரியாணியை சமைத்து கொண்டு தெருவில் உள்ள நாய்களுக்கு வழங்குவேன். அது எனக்கு குழந்தைகள் போல, நான் உயிரோடு இருக்கும் வரை இந்த பணியை தொடர்வேன். நான் முக்கியமாக 10 முதல் 12 இடங்களை தேர்வு செய்து வைத்துள்ளேன். அங்கு நான் சென்ற உடன் நாய்கள் என்னை நோக்கி ஓடி வரும்.

அதுமட்டுமில்லாமல் பூனைகளுக்கும் நான் உணவு அளிக்கிறேன். நான் சமைக்கும் பிரியாணியில் பீஸ்கள் குறைவாகத்தான் இருக்கும். எலும்பு துண்டுகள் நிறைய இருக்கும். ஏனெனில் நாய்களுக்கு அதுதான் மிகவும் பிடிக்கும். இந்த பணியை நான் தொடர்ந்து செய்துகொண்டே இருப்பேன்” என்று அவர் கூறுகிறார். இந்த ஊரடங்கு காலத்தில் வாயில்லா ஜீவன்களுக்கு உணவளிக்கும் இவரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Categories

Tech |