மிக ஆபத்தான சுனாமி ஒன்று கலிபோர்னியாவின் சான் டியாகோ கடற்கரையில் ஏற்படவிருப்பதால் கடற்கரையின் மொத்த வணிகத்தையும் அழிக்கும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
கலிபோர்னியாவின் சான் டியாகோ கடற்கரையில் ரிக்டர் அளவில் 7.0-க்கும் அதிகமாக பதிவாகும் ஒரு நிலநடுக்கம் உருவாகும் என்றால் அவை 4 அடி உயர அலைகளாக சுனாமியை உருவாக்கும் என புவியியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த சுனாமியானது துறைமுகத்தில் உள்ள வணிகங்களையும், படகுகளையும் சேதப்படுத்தும்.
மேலும் சான் டியாகோவை பொருத்தவரையில் சுனாமி உருவாவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் உள்ளதாக புவியியலாளர்கள் கூறுகின்றனர். அதோடு சான் டியாகோவில் கடந்த நூறு வருடங்களில் 11 சுனாமிகள் மட்டுமே நிகழ்ந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.