ஜெனீவா ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னாள் நம்பர் 1 வீரரான ரோஜர் பெடரர் அதிர்ச்சித் தோல்வியடைந்தார்.
முன்னாள் நம்பர் 1 வீரருமான ரோஜர் பெடரர்(சுவிட்சர்கிலாந்து), கால் முட்டிகளில் ஏற்பட்ட காயத்தினால் ,அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதனால் போட்டியில் பங்கு பெறாமல் இருந்த அவர், 2 மாதங்களுக்குப் பிறகு ஜெனீவா ஓபன் டென்னிஸ் போட்டியில் களமிறங்கினார். நேற்றுமுன்தினம் களிமண் தரையில் நடந்த போட்டியில், 2வது சுற்றில், 8வது இடத்தில் உள்ள ரோஜர் பெடரர் ,ஸ்பெயினை சேர்ந்த 75-வது இடத்தில் உள்ள பாப்லோவுடன் மோதி, 4-6, 6-4, 4-6 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தார். 1 மணி நேரம் 52 நிமிடங்கள் வரை நீடித்த போட்டியில் ,கடைசி செட்டில் 4-2 என்ற கணக்கில் ,முன்னிலையில் இருந்த பெடரர், பிறகு 4 கேம்களை தவறவிட்டு தோல்வி அடைந்தார்.
இதில் வெற்றி பெற்ற 35 வயதான பாப்லோ அந்துஜாரர் கூறும்போது, நான் பெடரரை தோற்கடித்தது, இன்னும் என்னால் நம்ப முடியவில்லை என்றும், அவருடன் போட்டியில் மோதியது கனவு போல இருந்ததாகவும் கூறினார். இவரை தோற்கடித்ததன் மூலம் இன்னொரு படி மேல் சென்று சென்றுவிட்டதாகவும் இதை நினைத்து பெருமிதம் கொள்கிறேன், என்றும் கூறினார்.
போட்டிக்குப் பின் 39 வயதான பெடரர் கூறும்போது, அடுத்ததாக 30ஆம் தேதி நடைபெற உள்ள பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க திட்டமிட்டுள்ளார். அதோடு இந்த சீசனில் மிகக்குறைவான ஆட்டங்களில் மட்டுமே நான் விளையாடி இருக்கிறேன். என்னுடைய ஆட்டத் திறன் எந்த நிலையில் இருக்கிறது என்பதையும் தெரிந்து கொண்டேன் .இந்த நிலையில் பிரெஞ்சு ஓபன் போட்டியில் வெல்வது பற்றி நினைத்துக்கூட பார்க்க முடியாது என்றும் அவர் கூறினார். அத்துடன் பட்டத்தை வெல்வதற்கான போட்டியில் நான் இல்லை என்று கூறினார்