Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

காய்கறி சந்தைக்கு இரவு 10 மணி வரை அனுமதி…. திடீர் அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அன்றாட தேவைகளுக்கு மட்டும் சில அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதுவும் குறிப்பிட்ட நேரம் வரை மட்டுமே. முதலில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மளிகை உள்ளிட்ட காய்கறி கடைகள் திறந்து இருக்கலாம் என தமிழக அரசு அறிவித்தது.

அதன்பிறகு கடந்த வாரம் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே அனுமதி என அறிவித்தது. அதனால் பெரும்பாலான இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காய்கறி சந்தை திடீரென்று பிற்பகல் 3 மணியில் இருந்து இரவு 10 மணிவரை இயங்கலாம் என்று ஆட்சியர் சமிரன் அறிவித்துள்ளார். ஆலங்குளம் சந்தையில் இருந்து கேரள மற்றும் பிற மாவட்டங்களுக்கு காய்கறிகள் அனுப்புவதால் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |