Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு நினைக்கல… தீடிரென ஏற்பட்ட நெஞ்சுவலி… பரிதாபமாக உயிரிழந்த டிரைவர்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் லாரி ஓட்டிக் கொண்டிருக்கும் போது நெஞ்சுவலி ஏற்பட்டதுடன் விபத்து ஏற்பட்டதால் டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள நச்சாந்துபட்டி புதூர் பகுதியில் துரை என்பவர் வசித்து வந்தார். இவர் நமணசமுத்திரத்திலுள்ள குடிநீர் விற்பனை நிலையத்தில் மினி லாரி டிரைவராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் திருமயத்திலிருந்து புதுக்கோட்டைக்கு லாரியை ஓட்டிச் சென்ற போது புதுக்கோட்டை- காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து லாரியை சாலையோரம் நிறுத்த முயன்றுள்ளார். ஆனால் லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் துரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுக்குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |