Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அவரை கைது பண்ணுங்க… 5 மாத கர்ப்பிணிக்கு நடந்த விபரீதம்… ஆட்சியர் வாகனத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு…!!

5 மாத கர்ப்பிணியான பெண் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது பெற்றோர் மற்றும் உறவினரிடையே அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டத்திலுள்ள சிறுகளத்தூர் பகுதியில் பழனிவேல் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு ரேணுகா என்ற மகள் இருந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரேணுகாவை குவாகம் பகுதியில் வசிக்கும் சுபாஷ் என்பவருடன் திருமணம் செய்து வைத்துள்ளனர். இதில் ரேணுகா தற்போது 5 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் ரேணுகாவிற்கும் அவரது கணவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ரேணுகாவின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அவர் 5 மாத கர்ப்பிணியாக இருப்பதால் சீர் செய்வதற்காக சுபாஷ் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அப்போது ரேணுகா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். அதன்பின் மயக்க நிலையில் இருந்த ரேணுகாவை  பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடனடியாக மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு ரேணுகாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்  ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் ரேணுகாவின் பெற்றோர்கள் தனது மகளின் இறப்பில் மர்மம் உள்ளதாக கூறி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின்படி மருத்துவமனைக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ரேணுகாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து ரேணுகாவின் உடலைப் பெறுவதற்கு அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையில் காத்திருந்தனர். இந்நிலையில் மருத்துவமனைக்கு மாவட்ட ஆட்சியாளர் ரத்னா கோட்டாட்சியர் அமர்நாத் ஆகியோர் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது ரேணுகாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவ்வழியாக சென்ற மாவட்ட ஆட்சியாளரின் வாகனத்தை நிறுத்தி ரேணுகாவின் இறப்பில் மர்மம் உள்ளதாகவும்  அவரது கணவரை உடனடியாக கைது செய்யக்கோரியும் திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .

இது குறித்து தகவல் அறிந்த காவல் சூப்பிரண்டு தேவராஜ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் வசந்த், அதிகாரிகளுடன் இணைந்து ரேணுகாவின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவர்களிடம் ரேணுகாவின் இறப்பிற்கு காரணமாணவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த பின்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். இவ்வாறு தீடீரென மாவட்ட ஆட்சியாளரை முற்றுகையிட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |