ஈரோட்டில் கெமிக்கல் ஏஜென்சி நடத்தி வரும் ராஜா என்பவரது வீட்டில் 62 சவரன் நகைகள் மற்றும் 10,000 ரூபாய் பணத்தை கொள்ளையரகள் கொள்ளையடித்து விட்டு தப்பிச்சென்றனர்.
ஈரோட்டை அடுத்த ரகுபதி நாயக்கன் பாளையத்தில் வசித்துவரும் ராஜா என்பவர் கெமிக்கல் ஏஜென்சியை நடத்தி வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் வீட்டில் நன்கு அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது அப்போது சாமர்த்தியமாக உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் உறங்கிக்கொண்டிருந்த அறையினை தாழ்பாள் போட்டு பூட்டி விட்டு பீரோவில் இருந்த 62 சவரன் நகைகள் மற்றும் 10,000 ரூபாய் பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பிச்சென்றனர்.
பின்னர் ராஜா கண்விழித்து பார்த்த போது பீரோ திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.பின்னர் பதறிப்போய் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். பின்னர் விரைந்து வந்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவத்தில் 5 க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு இருக்கலாம் என அவர்கள் சந்தேகப்படுகின்றனர். வீட்டைச் சுற்றி சிசிடி கேமரா எதுவுமே இல்லாததால் கொள்ளையர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் கொள்ளை அடிக்கும் போது வீட்டில் வளர்க்கப்பட்ட நாயையும் அவர்கள் தாக்கிது விசாரணையில் தெரியவந்துள்ளது.