Categories
சினிமா

என் பிறந்தநாளை கொண்டாடாதீர்…. ரசிகர்களுக்கு ஜூனியர் என்டிஆர் வேண்டுகோள்….!!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு மற்றும் பகுதி நேர ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். மேலும் கொரோணா பரவலை கட்டுப்படுத்த அவ்வப்போது அரசு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு வருகிறது. அதில் முக்கியமான ஒன்று மக்கள் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது. அதுமட்டுமல்லாமல் பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கவே பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தெலுங்கு திரை உலக சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான ஜூனியர் என்டிஆருக்கு நாளை பிறந்தநாள். ஆனால் ரசிகர்கள் யாரும் தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்றும், வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார். நாட்டில் ஏராளமானோர் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் இந்த சமயத்தில் கொண்டாட்டம் ஏற்புடையதல்ல என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |