Categories
சினிமா தமிழ் சினிமா

ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் ரீமேக் ஆகும் ‘ஒத்த செருப்பு’…. பார்த்திபன் அறிவிப்பு…!!!

ஒத்த செருப்பு திரைப்படம் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் ரீமேக் ஆவதாக பார்த்திபன் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் நடிகராகவும், இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் பார்த்திபன். இவரது நடிப்பில், இயக்கத்தில், தயாரிப்பில் வெளியான ஒத்த செருப்பு சைஸ் 7 என்ற திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இத்திரைப்படம் இரண்டு தேசிய விருதுகளையும் வென்றுள்ளது.

இந்நிலையில் இத்திரைப்படம் தற்போது ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் ரீமேக் செய்ய இருப்பதாக பார்த்திபன் தெரிவித்துள்ளார். இப்படத்தின் இந்தி ரீமேக்கில் நவாசுதீன் சித்திக் நடிக்க உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தற்போது ஆங்கிலத்தில் யார் நடிக்கப் போகிறார் என்பது குறித்த தகவல் கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |