தமிழகத்திற்கு இதுவரை 407 மெட்ரிக்டன் ஆக்சிஜனை இந்தியன் ரயில்வே நிர்வாகம் வினியோகம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் பல அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் ஆக்சிஜன் தட்டுப்பாடும் சில மருத்துவமனைகளில் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர்.
இவற்றை சரி செய்வதற்காக தமிழக அரசு ஆக்சிஜனை உற்பத்தி செய்ய பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதை தொடர்ந்து தற்போது வரை தமிழகத்திற்கு ஏழு எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் 407 மெட்ரிக் டன் ஆக்சிஜனை இந்தியன் ரயில்வே வினியோகித்து உள்ளது. இதுவரை இல்லாத அளவில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு ஒரே நாளில் ஆயிரம் மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் விநியோகிக்கப்பட்டு உள்ளதாகவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.