Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தொழிலாளர்களுக்கு ரூ.2000…. முதல்வரிடம் ஈபிஎஸ் வேண்டுகோள்….!!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருவதால் கடந்த மே 10ஆம் தேதி தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு ஊரடங்கு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக தினக் கூலிகள், ஆட்டோ -டாக்ஸி ஓட்டுனர்கள் உள்ளிட்டோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் முழு ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தினக்கூலி தொழிலாளர்கள்,ஆட்டோ டாக்ஸி ஓட்டுனர்கள் மற்றும் முடி திருத்துவோர் உள்ளிட்டவர்களுக்கு உடனடியாக 2000 ரூபாய் மற்றும் சிறப்பு உணவு தொகுப்பினை வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்கள், தீப்பெட்டி பட்டாசு தொழிலாளர்கள், கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களும் ஊரடங்கு காரணமாக வருமானமின்றி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு ஊரடங்கின் போது அதிமுக அரசு வழங்கியது போலவே தற்போது அவர்களுக்கு உதவ வேண்டும்” என்று முதலமைச்சருக்கு இபிஎஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |