Categories
மாநில செய்திகள்

கமல் ஒரு சர்வாதிகாரி…. மநீம பொதுச்செயலாளர் விலகல்….!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சி பெரும் தோல்வியைத் தழுவியது. அதன்பிறகு கட்சியில் இருந்து பலரும் வெளியேறி வருகின்றனர்.தேர்தலில் தோல்விக்குப் பிறகு கமல்ஹாசனின் அணுகுமுறையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. அவர் மாறுவார் என்ற நம்பிக்கையும் இல்லை. தற்போது வரை கட்சியிலிருந்து துணைத் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் ராஜினாமா செய்துள்ளனர். சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளராக போட்டியிட்ட கமல்ஹாசன் கூட வெற்றி பெற முடியாத சூழலில் மொத்த கூடாரம் காலியாகி விட்டது.

இந்நிலையில் மக்கள் நீதி மையம் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திருச்சி முருகானந்தம் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து, கமல் மீது குற்றம்சாட்டிய 6 பக்க கடிதம் அனுப்பி உள்ளார்.அந்த கடிதத்தில் கமல்ஹாசனின் சர்வாதிகார போக்கினால் தேர்தலில் தோல்வி அடைந்ததாக குற்றம் சாட்டிய அவர், கூட்டணி கட்சிகளுக்கு 100 தொகுதிகளை ஒதுக்கியதே தோல்விக்கு காரணம் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |