Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் கமல்ஹாசனின் ‘விக்ரம்’… படத்தில் இருந்து விலகிய முக்கிய பிரபலம்… வெளியான தகவல்…!!!

நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் இருந்து ஒளிப்பதிவாளர் சத்யன் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தை இயக்கி வருகிறார் . இந்த படத்தில் நடிகர் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க இருப்பதாகவும், மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ்  முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Kamal Haasan's Vikram: Has Lokesh Kanagaraj adopted THIS aspect from his  previous films Maanagaram and Kaithi? | PINKVILLA

விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் விக்ரம் படத்தில் இருந்து ஒளிப்பதிவாளர் சத்யன் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் லோகேஷ் கனகராஜின் கைதி, மாஸ்டர் ஆகிய படங்களில் ஒளிப்பதிவாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சத்யன் விக்ரம் படத்தில் இருந்து விலகியதால் அவருக்கு பதில் சர்க்கார் பட ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

Categories

Tech |