தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதி வேகமாக பரவி வருகிறது. அதனால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் பாதிப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் தமிழக அரசு முதலில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல் படுத்தியது. ஆனாலும் கொரோனா பாதிப்பு குறையாத நிலையில் கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு ஊரடங்கு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பலனாக தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது. இருந்தாலும் கொரோனா பாதிப்பு சில மாவட்டங்களில் இன்னும் குறையவில்லை.
அதன்படி மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகமாக உறுதி செய்யப்பட்டு வருகிறது. அதனால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 246 ஆக அதிகரித்துள்ளது. புறநகரில் 53 இடங்கள், மாநகர் பகுதியில் 193 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் இருந்து மக்கள் வெளியே வரவும் உள்ளே செல்லவும் முடியாது. அவ்வாறு தடையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.