இ-பதிவு முறை அமலுக்கு வந்ததையடுத்து சோதனைச் சாவடிகளில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் கடந்த 10ஆம் தேதி முதல் வரும் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய தேவைகளுக்காக உள் மாவட்டங்களிலும் வெளி மாவட்டங்களுக்கும் பயணம் செய்ய கடந்த 17ஆம் தேதி முதல் இ-பதிவு முறை கட்டாயம் என அறிவிக்கப்பட்டது. அதன்படி அன்று முதல் இ-பதிவு முறை அமலுக்கு வந்தது.
இந்நிலையில் நாகை மாவட்டத்தில் திருக்குவளை காவல்துறையினர் சாலையில் இரும்பு தடுப்புகள் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை மறித்து இ-பதிவு அனுமதி உள்ளதா என காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அவ்வாறு இ-பதிவு அனுமதி இல்லாத வாகனங்களை காவல்துறையினர் அனுமதிக்காமல் திருப்பி அனுப்பி வைத்துள்ளனர்.