Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மொத்தம் ரூ 100000…. ஆசிரியையின் சிறப்பான செயல்…. குவியும் பாராட்டுகள்….!!

அரசு உதவி பெறும் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை ரூபாய் ஒரு லட்சத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கருப்பம்புலம் கிராமத்தில் வசந்தா என்பவர் வசித்து வருகிறார். இவர் அண்டர்காடு சுந்தரேசவிலாஸ் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர் பல ஆண்டுகளாக ஏழை எளிய மக்கள், மாற்றுத்திறனாளிகள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் போன்ற பலருக்கு தினமும் 200 உணவு பொட்டலங்களை வழங்கி வருகிறார்.

இந்நிலையில் கொரோனாவின் இரண்டாவது அலை பரவலை கட்டுப்படுத்த கொரோனா நிவாரண நிதிக்கு நிதி வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த வேண்டுகோளுக்கிணங்க ஆசிரியர் வசந்தா தனது சொந்தப் பணத்தில் இருந்து ரூபாய் ஒரு லட்சத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார். இதேபோல் அவர் கொரோனா முதல் அலையின் போது ரூபாய் 50000 பணத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கியது குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாறு பள்ளி ஆசிரியையின் உதவும் மனப்பான்மையை கண்டு அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Categories

Tech |