கடந்த சில நாட்களுக்கு முன்னர் அரபிக்கடலில் உருவாகிய டவ் தே புயல் கேரளா,மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களை புரட்டிப்போட்டு சென்றது. அதனால் மக்கள் அனைவரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.தற்போது வங்கக் கடலில் புதிய காற்றழுத்தம் தோன்றியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுபற்றி தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், வங்க கடலில் புதிய காற்றழுத்தம் தோன்றியுள்ளது.
அது வருகின்ற மே 23-ஆம் தேதி புயலாக மாறும் வாய்ப்பு உள்ளது. ஆனால் அதற்கு முன்னதாக மே 19ஆம் தேதி முதல் சென்னையில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று அவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருந்தாலும் இந்த புயலால் சென்னைக்கு ஏதாவது ஆபத்து வருமா என்பது இன்னும் ஒரு சில நாட்களில் தெரியவரும்.