Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

விதிமுறையை மீறி பயணமா…? அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்…. பறிமுதல் செய்ப்பட்ட ஆட்டோக்கள்….!!

வேலூரில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி இயங்கிய 8 ஆட்டோக்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் மளிகை, காய்கறி, மீன், இறைச்சி போன்ற கடைகள் காலை 10 மணி வரை மட்டுமே திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கார், ஆட்டோ போன்ற வாகனங்கள் இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரின்  தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனங்கள், கார் மற்றும் ஆட்டோக்களில் பயணித்தவர்களை போலீசார் நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அத்தியாவசியத் தேவை இன்றி பொதுமக்களை ஆட்டோக்களில் ஏற்றிச்சென்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து ஊரடங்கின் விதிமுறைகளை மீறி தேவையின்றி பொதுமக்களை ஏற்றிச்சென்ற 8 ஆட்டோக்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |