வாணியம்பாடியில் விவசாய நிலத்திற்குள் காட்டு யானை புகுந்து அட்டூழியம் செய்துள்ளது.
வேலூர் மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் வனப்பகுதியில் தண்ணீர் இல்லாததால் வனவிலங்குகள் காட்டுப்பகுதியில் இருந்து வெளியேறி ஊருக்குள் தண்ணீர் தேடி சென்றுள்ளது. இந்நிலையில் திருப்பத்தூரில் அருகில் இருக்கும் வயல்வெளிகளில் காட்டு யானை நுழைந்து தண்ணீர் தேடியுள்ளது. இதனையடுத்து அந்த வயல்வெளிகளில் பயிடப்பட்டுளள பயிர்களை காட்டு யானை மிதித்து சேதப்படுத்தி அட்டூழியம் செய்துள்ளது.
அதன்பின் அந்த காட்டு யானை அங்கு இருக்கும் கால்வாயில்தண்ணீரை குடித்து தன் தாகத்தைத் தீர்த்துக் கொண்டது. இதனையடுத்து பொதுமக்கள் காட்டு யானை சுற்றிதிரிவதை கண்டு ஊருக்குள் வராமல் தடுப்பதற்கு பட்டாசுகளை வெடித்து அதனை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். எனவே வனத்துறையினர் வனவிலங்குகளுக்கு தேவையான தண்ணீரை தொட்டிகளில் நிரப்பி வைக்க வேண்டும் என்ன அப்பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.