Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் ஜூன் 30- ஆம் தேதி வரை நீட்டிப்பு… அதிரடி அறிவிப்பு..!!

தமிழகத்தில் போக்குவரத்து வாகனங்களுக்கான வரியை அபராதம் இன்றி செலுத்த கால அவகாசத்தை நீட்டித்து  தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த ஊரடங்கு மிகக் கடுமையாக கடைபிடிக்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்திருந்தார். மக்கள் தேவையில்லாமல் வீட்டைவிட்டு வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். முழு ஊரடங்கு காரணமாக மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

பொருளாதார ரீதியாக அனைவரும் சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். இதை கருத்தில் கொண்டு தமிழக அரசு போக்குவரத்து வாகனங்களுக்கான வரியை அபராதம் இன்றி செலுத்த கால அவகாசத்தை நீட்டித்துள்ளது. போக்குவரத்து வாகன வரி செலுத்தும் கடைசி தேதி மே 15 ஆக இருந்த நிலையில் ஜூன் 30-ஆம் தேதி வரை அவகாசத்தை நீட்டித்துள்ளது. கால அவகாசம் மூலம் தமிழகத்தில் சுமார் 15 லட்சம் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் பயனடைவார்கள் எனவும் கூறப்படுகின்றது.

Categories

Tech |