வங்காளதேசத்தில் ஊரடங்கு விதிமுறைகள் மேலும் நீடிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்காள தேசத்தில், கொரோனா தீவிரத்தை குறைக்க கடந்த 5 ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தபட்டிருந்தது. அதன் பின்பு 16ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்நிலையில் வரும் மே 23 ஆம் தேதி வரை கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும் பட்சத்தில், அத்தியாவசிய தேவைகளுக்கு தடைகள் கிடையாது என்றும் கூறப்பட்டிருக்கிறது. நாட்டில் கடந்த ஒரே நாளில் சுமார் 361 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.