கொரோனா பாதித்த சுகாதார பணியாளர் ஒருவர் தன் வீட்டின் குளியலறையில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கடந்த மாதம் முதல் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதி, படுக்கை வசதி இல்லாமல் நோயாளிகள் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் பலரை வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ளுமாறு அரசு தெரிவித்து கொண்டு வருகின்றது.
இந்நிலையில் தெலுங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டத்தை சேர்ந்த அசோக் என்ற நபர் ஒருவர் சுகாதார பணியாளராக பணியாற்றி வருகிறார். இவர் இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் அவரை வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ளுமாறு கூறி உள்ளனர். ஆனால் அவரது வீடு மிகவும் சிறியது என்ற காரணத்தினால் குளியலறையில் தனிமைப்படுத்திக் கொண்டு இருந்து வந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட சுகாதாரத்துறை ஊழியர்கள் அவரை மீட்டு அரசின் கொரோனா சிகிச்சை மையத்திற்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர்.