Categories
தேசிய செய்திகள்

மாற்றுத்திறனாளியான சகோதரிக்கு… திருமண வாழ்வில் பங்குகொடுத்த தங்கை… நெகிழ்ச்சி அடைய வைக்கும் சம்பவம்…!!

கர்நாடகாவில் மாற்று திறனாளியான அக்காவிற்கு தன் திருமண வாழ்வில் பங்களித்த தங்கைக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ள வேகமடுவே கிராமத்தில் சுப்ரியா என்ற வாய் பேச முடியாத இளம்பெண் தனது பெற்றோருடன் மற்றும் தங்கையுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சுப்ரியா மாற்றுத்திறனாளி என்பதால் அவரை திருமணம் செய்து கொள்ள யாரும் முன்வரவில்லை. இதனையடுத்து அவரின் தங்கையான லலிதாவிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு உமாபதி என்ற நபருடன் திருமணம் நிச்சயமாகி உள்ள நிலையில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வந்துள்ளது.

இதனைதொடர்ந்து என் அக்கா வாய் பேச முடியாததால் அவரை திருமணம் செய்து கொள்ள யாரும் தயாராக இல்லை என்றும், எனவே நீங்கள் என் அக்காவை திருமணம் செய்து கொள்ளுமாறு உமாபதியிடம் லலிதா கூறியுள்ளார். இதற்கு உமாபதி மறுத்த நிலையில் என் அக்காவை திருமணம் செய்து கொண்டால் மட்டுமே நான் உங்களை திருமணம் செய்து கொள்வேன் என்று லலிதா கூறியுள்ளார். இதற்குப் பின்னர் உமாபதி சுப்ரியாவையும் திருமணம் செய்து கொள்வதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து உமாபதி குடும்பத்தினருடன் பேசி சம்மதம் வாங்கியுள்ள நிலையில் நேற்று ஒரே மேடையில் சுப்ரியா மற்றும் அவரது தங்கை லலிதாவை உமாபதி திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும் உடன் பிறந்த சகோதரிக்கு திருமண வாழ்க்கையில் பங்கு கொடுத்த லலிதாவை திருமணத்தில் கலந்து கொண்ட அனைவரும் தங்களது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |