டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு சிறப்பாக பயிற்சி எடுத்துக் கொண்டு, தயாராகி வருவதாக இந்திய பேட்மிண்டன் வீராங்கனையான பி.வி. சிந்து கூறினார் .
டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வருகின்ற ஜூலை மாதத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கு தகுதி பெற்ற வீரர் , வீராங்கனைகள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய பேட்மிண்டன் சார்பாக பி.வி. சிந்து, சாய் பிரனீத் இரட்டையர் ஜோடி பிரிவில் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி தகுதி பெற்றுள்ளனர். கடந்த 2014ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில், வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து ,இந்த முறையும் பதக்கத்தை வெல்வார், என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இதுகுறித்து பி.வி. சிந்து கூறும்போது, ஒலிம்பிக் போட்டி தொடங்குவதற்கு இன்னும் 66 நாட்கள் மட்டுமே உள்ளதாகவும், இதற்காக தனிப்பட்ட முறையில் என்னை தீவிர பயிற்சியில் ஈடுபடுத்திக் கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
என்னுடைய பயிற்சியாளரான பார்க் டா சங் போட்டியின் சூழ்நிலைக்கு ஏற்ப ,என்னை தயார்படுத்தி பயிற்சி அளிக்கிறார். என்னுடைய தந்தையும் எனக்கு பக்கபலமாக இருக்கிறார். ஆனால் தற்போது கொரோனா தொற்றால் ,சர்வேதச போட்டிகள் ரத்து செய்யப்படுவது வருத்தமளிக்கிறது. இருந்தாலும் அனைவருடைய நலனை கருத்தில் கொண்டே ,இந்த முடிவு எடுக்கப்படுவதாக தெரிவித்தார். ஒருவேளை போட்டிகள் நடைபெற்றாலும் முழுமையாக பாதுகாப்பு இருக்குமா என்பது பற்றி தெரியாது .பாதுகாப்பு வளையத்திற்குள் போட்டிகள் நடைபெற்றாலும், நாம் கவனத்துடன் இருக்க வேண்டும். எனவே இந்த ஒலிம்பிக் போட்டியை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பதாக அவர் கூறினார்.